Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, 1 பில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மேற்படி அமைச்சில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டமைக்கு எதிராகவே தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைப்பற்றி போலியானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனவும் அமெரிக்காவில் தான் வங்கிக் கணக்கொன்றை வைத்துள்ளதாகத் கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், மேற்படி குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு விமலுக்கு சவால் விடுப்பதாகத் தெரிவித்த அவர், சீ.ஐ.டிக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம், தனக்குச் சொந்தமான காணி உரிமைப் பத்திரங்கள் உள்ளனவெனவும் அவர் கூறியுள்ளார். எனவே, அவ்வாறு சீ.ஐ.டிக்கு தகவல் கிடைத்திருந்தால், அவற்றை வெளியிடும் அதிகாரம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எவ்வாறு கிடைத்ததெனவும் முன்னாள் அமைச்சர் வினவினார்.
எவ்வாறாயினும், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்த அவர், 15 வருடங்களாக தான் வகித்த அமைச்சுகளின் கீழ் இருந்த, சதொச நிறுவனத்தில் தரமற்ற பொருள்களை இறக்குமதி செய்தாக முன்வைத்த குற்றச்சாட்டுகளும் உண்மைக்குப் புறம்பானவை என்றார்.
இவ்வாறு, அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைப் பற்றிய தவறான விம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிப்பதாகத் தெரிவித்த அவர், அமைச்சர் விமலுக்கு எதிராக, 1 பில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago