Editorial / 2025 ஜூலை 16 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வங்கி ஒன்றின் பிரதான அலுவலகத்துக்கு போலியான ஆவணங்களை கையளித்து 188,825,000/= ரூபாயை பெற்று, ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில், அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
வங்கியின் முன்னாள் கடன் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த (40) வயதுடையவர் ஆவார்.
மோசடி தொடர்பாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய முன்னாள் அதிகாரி குற்றப் புலனாய்வு பிரிவின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) க்கு செவ்வாய்க்கிழமை (15) அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சந்தேக நபர் குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடிக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago