2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரூ. 19.04 பில்லியனுக்கு குறைநிரப்புப் பிரேரணை

Editorial   / 2018 மே 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் செலவுகளுக்கான மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக, 19.04 பில்லியன் ரூபாய் (1904 கோடி ரூபாய்) குறைநிரப்புப் பிரேரணையொன்று, ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால், நாடாளுமன்றத்தில் நேற்று (09) சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குறைநிரப்புப் பிரேரணையூடாக, வெளிநாட்டுத் தூதரங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு, வெளிவிவகார அமைச்சுக்கு 80 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வேலைத்திட்டத்துக்காக, இலங்கை இராணுவத்துக்கு 1.51 பில்லியன் ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 180 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு 1.25 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், சமுர்த்தி பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும் வேலைத்திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சுக்கு 2.66 பில்லியன் ரூபாயும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக 2.60 பில்லியன் ரூபாயும், இந்தக் குறைநிரப்புப் பிரேரணையூடாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X