2026 மே 06, புதன்கிழமை

ரூபாய் 1,000 பொதி மீண்டும் விநி​யோகம்

Editorial   / 2021 மே 03 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் நேற்றிலிருந்து (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியுள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் இதனைக் கொள்வனவு செய்ய முடியுமெனவும் தரமான பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் விநியோகித்த நிவாரணப் பொதியை விட இம்முறை மேலும் சில பொருள்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனக் கூறிய அவர், சம்பா அரிசி, நாட்டரிசி என்பன தலா ஒரு கிலோகிராம் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் கட்ட சதொச நிவாரண பொதியில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி, ஒரு கிலோகிராம் நாட்டரிசி, ஒரு கிலோகிராம் கோதுமை மா, ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பு, ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனி, 200 கிராம் நெத்தலி, 100 கிராம் தேயிலைத் தூள், 50 கிராம் சோயா மீட் பெக்கெட், 100 கிராம் துண்டு மிளகாய், 50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல் மற்றும் முகக்கவசம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .