Janu / 2025 ஜூன் 12 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன் போது,பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை மற்றும் அவர்களின் சம்பள உயர்வு பிரச்சினை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இப்பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக ரோரி முங்கோவன், செந்தில் தொண்டமானிடம் உறுதி அளித்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .