2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

லும்பினிக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறு அறிவித்தல் கிடைக்கும்வரை லும்பினிக்கு செல்வதை  தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் நேபாலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

லும்பினியில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 யாத்திரிகர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், லும்பினிக்கு செல்வதற்கான பயண ஆலோசனை அல்லது லும்பினி பகுதிக்கு பயணித்துக்கொண்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்ள  (1097714720213) என்ற இலக்கத்துடன் இணைப்பை ஏற்படுத்துமாறு இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .