Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை தானே கொலை செய்ததாகக் கூறி, கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட, இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் சடலம், நேற்றுப்
புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது. இதற்காக, இரகசிய பொலிஸைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று, கேகாலைக்குச் சென்று, சடலத்தை தோண்டியெடுத்துக்கொண்டு, கொழும்பு வந்துள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை, கரடுபான பகுதியைச் சேர்ந்த 52 வயதான இலந்தரகே ஜயமான்ன என்பவரே, இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
இவரது சடலம், கடந்த 14ஆம் திகதி அதிகாலை வேளையில், அவருடைய அறையிலிருந்து மீட்கப்பட்டதுடன், அவரால் கைப்பட எழுதப்பட்ட சடலமொன்றும், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இவரது மரணம் குறித்து, இரகசியப் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவுடன், நேற்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago