2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

லசந்த பயணித்த வாகனத்திலிருந்து கைரேகை சிக்கியது

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவர், பயணித்த வாகனத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைரேகையின் உரிமையாளருக்கு, பொலிஸார் வலைவீசியுள்ளனர்.  

குறித்த மோட்டார் வாகனத்தில் இருந்து, 3 கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசந்தவின் கொலைக்கு, இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக, தற்போது வரையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 280 பேரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு, குற்றப்புலனாய்வு பிரிவுப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, நாள் ஒன்றுக்கு 5 அதிகாரிகள் என்ற ரீதியில், வாக்குமூலம் பதிவு செய்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .