2025 ஜூலை 26, சனிக்கிழமை

லஞ்சம் கேட்ட நடிகருக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஜூலை 25 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரேகொட விமானப்படை தளத்தின் அதிகாரி ஒருவரிடமிருந்தும், மதுகமவில் உள்ள பிரபல தேசிய பாடசாலையின் அதிபரிடம் இருந்து  லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் தொடம்கொட பகுதியைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க வௌ்ளிக்கிழமை (25),  உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத் தரங்கா என்ற நடிகர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, லஞ்சப் பணம் கோரப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கோரப்பட்டதாகக் கூறினர்.

முறைப்பாட்டார்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இரண்டு முறைப்பாட்டாளர்களுக்கும் தலா ரூ. 30,000  வீதம்   வங்கிக் கணக்குகளில் வரவு வைக்குமாறு அறிவிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கட்டுகுருத்த சந்தியில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X