2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

லொறி கவிழ்ந்து விபத்து ; ஓட்டுநர் பலி

Janu   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில், மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ரன்ன நகருக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் ஓட்டுநர் உயிரிழந்ததாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தலயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்றே இவ்வாறு புதன்கிழமை (03) காலை  விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

லொறியை நீண்ட நேரம் செலுத்திய நிலையில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார்   சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அக்குறுகொட, சுல்தானா கொட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மஹகமகே இந்திக  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .