Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 10 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, 60 கோடி ரூபாய் பெறுமதியான சில் துணியை விநியோகிப்பதில் மோசடியில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அதாவது 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதிக்கு இடையில் சில் துணியை விநியோகிக்கும், போது இந்த மோசடி இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் இவ்விருவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, ஆரம்ப சாட்சியாளர்கள் ஐவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதிவாதி தரப்பில் நேற்று ஆஜராகியிருந்த சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
2 hours ago
4 hours ago