2025 ஜூலை 07, திங்கட்கிழமை

லொறி சாரதியை அச்சுறுத்தி பணம் கொள்ளை

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா - ​வேயங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்துகொண்டிருந்த மரக்கறி லொரியொன்றை இடைமறித்து அதிலிருந்து நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக லொரியின் சாரதி வட்டவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கெப்படிபொல, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறிகளை சேர்ந்துவந்து அவற்றை வேயங்கொடவில் விற்பனை செய்ததால் கிடைத்த பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிலொன்றில் வந்த இருவர் குறித்த லொறியை இடைமறித்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும், நல்லிரவு 12.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிடம் பணமில்லை எனக் கூறிய சாரதியை அச்சுறுத்தியே பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,  சம்பவம் தொடர்பான விசாரணைகளை வடவல, ரொசெல்ல பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .