2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு சி.விக்கு உரிமை இல்லை

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரோரா 

வடக்கிலிருந்து பௌத்த விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்விதமான உரிமைகளும் இல்லையென, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிப் பிரதியமைச்சர் ரஞ்சன் இராமநாயக்க, நேற்று (26) கூறினார். 

நாட்டின் வேறு பகுதிகளில் உள்ளது போன்று, வடக்கிலும் வழிபாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டிய தேவையில்லை என, பிரதியமைச்சர் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

“பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ள இடங்களில் மக்கள் ஒற்றுமையாய் வாழ்கின்றனர். இந்த நிலைமை, வடக்கிலும் இருக்க வேண்டும். 

“நாட்டின் சில பகுதிகளைக் கேட்டுக்கூட சிலர், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆனால், வீதியில் இறங்கிவிட்டதற்காக, அவர்களுக்கு அது கிடைக்காது” என அவர் கூறினார். 

ஆயினும், சமயமுறைத் தீர்வுக்காக, விக்னேஸ்வரனினால் சில கோரிக்கைகளை விட்டுப் பேச முடியும் என்றார்.  விக்னேஸ்வரனின் பல கோரிக்கைகைகளில் ஒன்றை, தான் ஏற்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். 

 யுத்தத்தின் போது, நடந்த குறிப்பிட்ட விடயங்களை, அவரிடம் விசாரித்தால் தான் அது வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

சில இராணுவத்தினர், சண்டையின்போது எடுத்த வீடியோக்களை சனல் 4க்கு விற்றதாக கூறப்பட்டதையிட்டு, அவரிடம் விசாரணை நடத்தவேண்டும்.  

தனது மனைவியைக் கொன்றமைக்காக இராணுவ அதிகாரியும், போர் என்ற பெயரால் படையினர் சிலர் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பில் படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்தனர்.  

இது போன்ற சம்பவங்கள், மேயர் டென்ஸில் கொப்பேகடுவ, விஜயவிமலரத்ன மற்றும் ஹசலக காமினி போன்ற உண்மையான இராணுவ அதிகாரிகளுக்கு இழுக்காகும் என அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .