2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் பலி

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹவ - தலதாகம அட்டவரல சந்தியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று முன்னால் சென்ற லொறியில் மோதி கீழே விழுந்துள்ளது. அதனையடுத்து, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், கீழே விழுந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளான, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மஹவ அட்டவர பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

விபத்துச் சம்பவத்தையடுத்து லொறியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளின் சாரதி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .