2025 மே 19, திங்கட்கிழமை

வாகனங்களை ஒப்படைக்காதவர்கள் கைதுசெய்யப்படுவர்

George   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்களில் பலர், தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் ஒப்படைக்காததால் அவர்களை கைதுசெய்து, வாகனங்களை திரும்பப்பெற பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனை, நாடாளுமன்ற புனரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு பலமுறை அறிவித்துள்ளதாகவும்
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X