2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களின் விலை அதிகரிக்கும்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபாயின் மதிப்புக் குறைந்துள்ளமையால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அதன் தலைவர் சம்பத் மெரின்ஷிகே தெரிவிக்கையில், அமெரிக்க டொலர் ஒன்று 140 ரூபாயை அண்மித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து இருக்குமாயின், வாகனங்களின் விலை 8 சதவீதத்தினால் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்பிரகாரம், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொதுவான வாகனங்களின் விலை, 3 அல்லது 4 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கும்.

இதேவேளை, 1,000 குதிரைவலு கொண்ட சிறியரக மோட்டார் கார்களின் விலைகள், 75 ஆயிரம் ரூபாவிலிருந்து ஓர் இலட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .