2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாகனங்களின் விலை அதிகரிப்பு: இதோ விவரங்கள்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 11 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ‌ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1,800 முதல் 2,000 எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றனர்.

அனைத்துவிதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளது. இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திர​மே அமுலானதாகும். டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை.

இதேவேளை, க்ரூ கெப் ரக வாகனங்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .