2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விசேட அமைச்சரவை கூடியுள்ளது: சு.கவுடன் முக்கிய சந்திப்பு

Kanagaraj   / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட யோசனைகள்;, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்வைக்கப்படவிருக்கின்ற நிலையில், விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தக் கூட்டம், தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த விசேட அமைச்சரவை கூடியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தச் சந்திப்பு இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .