2025 மே 17, சனிக்கிழமை

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு 38 பாடசாலைகள் மூடப்படும்

Administrator   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவடைந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளுக்காக நாளை 9ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரையிலும்  38 பாடசாலைகள் மூடப்படும் என்று பரீட்சைகள் திணைகளம் அறிவித்துள்ளது.

இந்த விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக 3,256 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

20 மாவட்டங்களில் உள்ள 37 நகரங்களில் இருக்கும் 38 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்த காலப்பகுதியில் 21 பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் முதற்கட்ட பணிகள், 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். அதற்காக 7,800 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் 17 மாவட்டங்களில் உள்ள 20 நகரங்களில் இருக்கும் 23 பாடசாலைகளில் இடம்பெறும். அதில் 8 பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .