Princiya Dixci / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார சில்வா
அளுத்கம, களுவாமோதரை பிரதேசத்தில், இன்று காலை 6.45 மணியளவில், முச்சக்கரவண்டி மற்றும் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அலுத்கம, களுவாமோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மாலன் கொலின் ஜோன்ஸ் என்ற நபரே உயிரிழந்துள்ளார். சடலம், அளுத்கம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் இருந்த தூணில் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி, அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காள களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்
சைக்கிளில் பயணித்த நபர், அளுத்கம பிரதேசத்தில் உள்ள உணவகத்தில், உணவுப் பொருட்களை வாங்கச் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி, சைக்கிளின் பின்புறத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, அளுத்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago