2025 மே 22, வியாழக்கிழமை

விமான நிலையத்தில் வேலைநிறுத்தம்

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகம், தங்களது சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் எனக் கோரியே அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு சமுகமளிக்கவில்லை எனத் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வேலைகள் சுமுகமாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

பயணிகளுக்கு துரொல்லி(தள்ளுவண்டி) எடுத்துக் கொடுக்கும் பணியாளர்களும் துப்புரவுப் பணியாளர்கள் 90 பேருமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X