2025 மே 17, சனிக்கிழமை

வாரியப்பொல 'நங்கி'யிடம் அறைவாங்கியவருக்கு சிறை

Thipaan   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியப்பொலவில் வைத்து, பெண்ணொருவர் மீது  பாலியல் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியமைக்காக, அவரால் கன்னத்தில் அறையப்பட்ட ஆணுக்கு, 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வாரியப்பொல 'நங்கி' எனப் பின்னர் பிரபல்யமான தலினி அமல்காவிடம் அறை வாங்கிய வாரியப்பொல 'செல்வா' என்றழைக்கப்படும் றொபேர்ட் தன்சாலகே சந்திரா குமாரவுக்கே இந்தச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தன்னை அவதூறுக்குட்படுத்திய நபரை திலினி அறைந்த காணொளி, சமூக ஊடகத் தளங்கள் மூலம் பரவலடைந்து அதிக பிரபலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .