2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெற்றிபெறுபவருக்கே அதிகாரமும் பொறுப்பும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவர் ஒருவர் போட்டியிட்டு வெற்றிபெறுகின்றாரோ, அவருக்கே, கட்சியின் கொள்கைகளுக்கமைய ஆட்சி செய்யும் அதிகாரமும் கட்சிக்கு தலைமை தாங்கும் பொறுப்பும் வழங்கப்படும்” என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். 

மேலும், “சு.க.வை வளர்த்துவிட்டவர்கள் மூலமாக அரசியலுக்குள் காலடி எடுத்த வைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எச்சந்தர்ப்பத்திலும் கட்சியை பிளவுபடுத்த மாட்டார்” எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேல் மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,  

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் உருவாக்கியுள்ள புதிய கட்சி தொடர்பில், இன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அக்கட்சியில் உள்ளவர்கள், அண்மைக் காலங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள், புதிய கட்சியை உருவாக்கினாலும் தொடர்ந்து சு.க.வுடன் மீண்டும் இணைய விரும்பும் நோக்கம் தெளிவாகிறது. குறிப்பாக, அக்கட்சிக்கு தலைமை தாங்குபவரான ஜீ.எல்.பீரிஸ் கூறிவரும் கருத்துக்களும், அவ்வாறே அமைந்துள்ளன.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் நின்றே போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். தான் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக வேண்டி, அவர் கட்சியை விட்டு விலகவும் இல்லை, கட்சியை பிளவுபடுத்தவும் இல்லை. கட்சிக் கொள்கைகளுக்கமையவே செயற்பட்டு வெற்றிப்பெற்றதால், அவருக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.  

எனவே, ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், சு.க.வை சீரழிக்க வேண்டாம். அவ்வாறு சீரழிக்க எண்ணிச் செயற்பட்டால், இறுதியில் பாவத்தையே சம்பாதிப்பீர்கள்” என, அவர் எச்சரிக்கை விடுத்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .