2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வெல்லவாய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

George   / 2016 ஜூன் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய அலுத்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரிதாகி, துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.

22 வயதுடைய இளைஞனே காயங்களுக்கு உள்ளாகி, எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர், வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .