2025 மே 17, சனிக்கிழமை

வெளிநாட்டு பணத்துடன் ஒருவர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயற்சி செய்த நபர் ஒருவரை விமானநிலைய மற்றும் சிவில் விமான நிலைய ஊழியர்கள் கைது செய்து தங்களிடம் ஒப்படைத்ததாக, சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 70,000 சவுதி ரியால், 360 குவைட் தினார், 80 பஹ்ரெய்ன் தினார், 25 ஜோர்தான் தினார், 20 ஓமான் ரியால் உட்பட மொத்தம் 2,798,618 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை மீட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு-13ஐச் சேர்ந்த 35 வயதுடைய நபர், MJ 407 என்ற துபாய்க்கு செல்லும் விமானத்தில் இந்த வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .