2025 மே 19, திங்கட்கிழமை

வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை கோரி நகர்த்தல் பத்திரம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யொஹான் பெரேரா

வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சாத்தியத்தை ஆராய்வதற்கு ஒரு தெரிவுக்குழுவை நியமிக்கக் கோரும் ஒரு நகர்த்தல் பத்திரத்தை அரசாங்க மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கெண்ட ஓர் அணி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்வதுடன், அதன் பெருமையைப் பறைசாற்றும் வெளிநாட்டில் வதிவோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதென 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள இந்த நகர்த்தல் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

சுனில் ஹந்துன்நெத்தி, நிஹால் கலபதி, அநுர குமார திஸாநாயக்க, அஜித் பி பெரேரா, எரான் விக்கிரமரட்ன, எட்வாட் குணசேகர, திலிப் வேதஆராச்சி, அஜித் மன்னபெரும, காஞ்சனா விஜேசேகர, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, விமலவீர திஸாநாயக்க, இம்ரான் மொஹமட், ஹர்ஷன ராஜகருணா, டாக்டர் கவிந்த ஜயவர்தன, பேராசிரியர் அக்ஷு மாரசிங்ஹ, எஸ். சிவஞானம், ஜயம்பதி விக்ரமரத்ன, சி. விகேசேகேர, விஜித ஹேரத் மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X