2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ளை ஆமை திருட்டு: 9 பேர் கைது

Kanagaraj   / 2016 நவம்பர் 01 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று இடம்பெற்ற வெள்ளை ஆமை திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 9பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரான பிரசங்க தீபால் விக்ரமரத்ன என்பவர், சட்டத்தரணியின் ஊடாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில், இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

அவர், திக்வெல்ல பிரதேச சபையின் உப-தலைவராக 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .