Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 14 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவை, மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் இன்னும் தங்காலிக கூடாரங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
41 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீதொட்டுமுல்லை குப்பை மலை காரணமாக தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல தமக்கு விருப்பம் இல்லை எனவும் தமக்கு புது வீடுகளோ அல்லது வீடுகளை கைவிட்டுச் செல்ல நட்டஈட்டையோ வழங்க வேண்டும் என இம்மக்கள் கேட்பதாக கொலன்னாவை நகரசபை தலைவர் ரவிந்திர உதயசாந்த தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்துக்குச் சென்று தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்தவர்களை பார்வையிட்ட மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய, இந்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன், பாதிப்படைந்த வீடுகளை திருத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .