2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குகள் பதிவாகி​யுள்ள மின்​னணு இயந்​திரங்​கள், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் 62 மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்டுள்ளன. இந்த மையங்​களில் 4 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த 23 ஆம் திகதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 234 தொகு​தி​களி​லும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வந்து வாக்​களித்​தனர். இதனால், வரலாறு காணாத வகை​யில், 85.15 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு இயந்​திரங்​கள், விவி​பாட் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் அனைத்தும் வேட்​பாளர்​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் சீலிடப்பட்​டன. பின்​னர், வாக்கு எண்​ணிக்​கைக்​காக தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் அமைக்​கப்​பட்​டுள்ள 62 மையங்​களுக்கு பலத்த பொலிஸ் பாது​காப்​புடன் எடுத்​துச் செல்​லப்​பட்​டன.

வாக்கு எண்​ணும் மையங்​களுக்கு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் முழு​மை​யாக கொண்​டு​வரப்​பட்​டதும், பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வைத்​து, வேட்​பாளர்​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் சீலிடப்​பட்​டன. இந்த அறை​களை சுற்​றிலும் 4 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்ளது.

மத்​திய ஆயுதக் காவல் படை​யினர், தமிழ்நாடு சிறப்​புக் காவல் படை​யினர், சட்​டம் - ஒழுங்​கு, குற்​றப்​பிரிவு, போக்​கு​வரத்து பொலிஸார்  24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் கண்​காணிப்பு பணியை மேற்​கொண்டு வரு​கின்​றனர். சி.சி.டி.வி. கம​ராக்கள் மூல​மாக​வும் இந்த மையங்கள் கண்காணிக்​கப்​படுகின்றன. அரசி​யல் கட்சி​ முகவர்​களும் மையங்​களுக்கு வெளியே இருந்தபடி, கண்​காணித்து வரு​கின்​றனர்.

தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களிலும் பாது​காப்பு பணி​யில் மொத்தம் 18 ஆயிரம் பொலிஸார் ஈடு​பட்டுள்​ளனர். மே 4 ஆம் திகதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் ​வரை இந்த பாது​காப்பு தொடரும்​ என்​று பொலிஸ் தரப்​பில்​ தெரிவிக்கப்பட்​டுள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .