Mayu / 2026 மே 14 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் 13 வயதுச் சிறுமி ஒருவர் நீண்டகாலமாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\\

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் விசேட தேவையுடையவர்கள் (மாற்றுத்திறனாளிகள்) என்பதுடன், கடும் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இயலாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அச்சிறுமியை நீண்டகாலமாகத் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் இச்சம்பவம் குறித்துத் தகவல் கசிந்தபோது, கிராமத்திலுள்ள சில செல்வாக்கு மிக்க தரப்பினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தாமல் விடயத்தைச் சமரசம் பேசி மூடிமறைக்க முயற்சித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், விடயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குடும்பங்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் இவ்வாறான கொடூரச் செயல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
12 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
47 minute ago