2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விசேட வர்த்தக வரி நீக்கம்; எப்போது தெரியுமா?

Freelancer   / 2024 மார்ச் 29 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை எளிமையாக்கியதும் இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்ட அவர், உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .