2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடக்கு, கிழக்குக்கு ரூ. 42 பில். ஒதுக்கீடு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக, 214.123 பில்லியன்  ரூபாயை, அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.   

இதில், வடமாகாண சபைக்கு 22.094 பில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாண சபைக்கு 20.103 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் முழுவிவரம் வருமாறு.  

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா: 214.123 பில்லியன் ரூபாய்  மேல் மாகாண சபைக்கு 16.516 பில்லியன் ரூபாயும் மத்திய மாகாண சபைக்கு 24.712 பில்லியன்  ரூபாயும் தென் மாகாண சபைக்கு 21.04 பில்லியன் ரூபாயும் வடமேல் மாகாண சபைக்கு 23.87 பில்லியன்  ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.  

அதேவேளை, வட மத்திய மாகாண சபைக்கு 16.14 பில்லியன் ரூபாயும் ஊவா மாகாண சபைக்கு 18.82 பில்லியன் ரூபாயும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 21.65 பில்லியன்  ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .