Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 07 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு புகையிரத மார்க்கத்தின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைக்காக 06 மாத காலத்திற்கு இந்த மார்க்கம் மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
அதன்படி, இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு புகையிரத மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
5 hours ago