Freelancer / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது.
சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் இந்தச் செயற்பாடானது தமது சங்கத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறும் செயல் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே இன்று முதல் 48 மணிநேரத்திற்கு நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். R
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago