2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யாழ்.,விமான நிலைய முனையத்துக்கு அடிக்கல்

Janu   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது.

இதில்  யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய  இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி,  இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர்,  பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது .

இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு ஏறத்தாள  700 ரூபாய்  மில்லியன் ஆகும் என சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .