2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

வயதான பெண்களை டுபாய்க்கு அனுப்பியவர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயதான பெண்களை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அனுப்பிய ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

கோட்டே பகுதியில் நடத்தப்படும் வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தின் மூலமே பெண்கள் பலர் சுற்றுலா விசாக்களின் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் அங்கு தொழிலைப் பெறமுடியாத நிலையில் நாடு திரும்பிய பின்னரே, முகவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின்போது குறித்த நபர் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்ததாகத் தெரியவந்தது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .