Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று இன்று திங்கட்கிழமை (09) இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தச் செயற்குழுவினர், கொழும்பில் தமது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், அது சார்ந்த செயற்பாடுகளில், அரசாங்கத்தின் உண்மைத்தன்மை மற்றும் காணாமற்போனோர் தொடர்பாக வழங்கப்படக் கூடிய தீர்வுகள் குறித்தும், ஐ. நா செயற்குழுவினர் ஆராயவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் துணைத் தலைவர் பெர்னாட் டுஹைம், டை உன்க் பைக், மற்றும் ஏரியல் டுலிட்ஸ்கி ஆகியோருடன், மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தின் உறுப்பினர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
அரசின் உயர்மட்ட அதிகாரிகள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ஐ.நாவின் செயற்குழுவினர், இதன் போது சந்திக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago