2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வரவு - செலவுத்திட்டம் 2017: ஐ.தே.க - சு.க இன்று பேச்சு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டம் தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (25), அமைச்சர்களுக்கு இடையிலான தீர்க்கமான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில், நிதி அமைச்சின் அலுவலகத்தில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு - செலவுத்திட்டக் குழுவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரவு - செலவுத்திட்டக் குழுவும் கலந்துகொள்ளுமென்றும் தெரிவிக்கப்ப டுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, தன்னுடைய வரவு - செலவுத் திட்ட யோசனை தொடர்பான ஆவணத்தை, நிதி அமைச்சரிடம் கையளித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினத்தில் நடைபெறும் கலந்துரையாடலின் போது, அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் பேசப்படும் என்று, தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .