2025 மே 19, திங்கட்கிழமை

வரவு - செலவுத் திட்டம் 2016க்கான முதலாம் வாசிப்பு இன்று

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சித் திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு, ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, வரவு - செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு) நவம்பர் மாதம் 20ஆம் திகதியும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இதற்காக 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு, டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன், குழுநிலை விவாதம் டிசெம்பர் மாதம் ஏழாம் திகதியும் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 19ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X