2025 ஜூலை 16, புதன்கிழமை

வருமானத்தை இழந்த சகலருக்கும் நிவாரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டோ சாரதிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சாரதிகள், கட்டுமாணத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுகொண்டிருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு, நாளை (16) முழுமையாக வழங்கப்பட்டுவிடுமென தெரிவித்துள்ள அரசாங்கம், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த சாரதிகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்டுமாணத்துறைகளில் ஈடுபட்டுள்ள குறிப்பாக செங்கல், மணல் விநியோகத்தர்கள், தச்சர், மரவேலை செய்வோர், வர்ணம் பூசுவோர், நீர்குழாய் திருத்துனர்கள், மின்சார வயரிங் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு உதவியாளராகப்  பணிபுரிபவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தால் 5,000 ‌ரூபாய் நிதியுதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதென, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இன்று (15) அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், சிறிய தொழிற்றுறை, இனிப்புத் தொழிற்சாலை, கைத்ததி, கால் துடைப்பம் உள்ளிட்ட சிறிய தொழிற்றுரையாளர்களுக்கும் பிரதேச ரீதியிலும் கிராம மட்டத்திலும் பொருள் விநியோகம், தளபாடம், ஆடை தைப்பவர்கள், சிகையலங்காரம் செய்வோர் (பாபர்) , மதஸ்தலங்களுக்கு அருகில் பொருள்களை விற்பவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் கிராமிய குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அதன் அதிகாரி ஊடாக கொரோனா தொற்றால் வருமானங்களை இழந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் குழுக்கள் 17, 18 கி​ராமங்களில் அந்தக் குழுகூடும். இதற்கமைய குறித்த குழு இறுதியாக தீர்மானிக்கப்படும் அறிக்கை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு, 20, 21, 22ஆம் திகதிகளில் பிரதேச குழு அனுமதியளித்தவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .