2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வற் தொடர்பான இறுதி தீர்ப்பு: சபாநாயகரிடம் விரைவில் கையளிக்கப்படும்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலம் தொடர்பிலான தீர்ப்பு, இன்னும் சில நாட்களின் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என உயர்நீதிமன்றம், அறிவித்துள்ளது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி மற்றும் சட்டத்தரணி தினேஷ் த சில்வா ​ தாக்கல் செய்த 4 மனுக்கள், திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

நீதியரசர் கே.ஸ்ரீ பவன் உள்ளிட்ட 3 நீதியரசர்கள் தலைமையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்ட போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எழுத்து மூலமான வாதங்கள், இன்று புதன்கிழமை (19)க்கு முன்னதாக கையளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் , அரசியலமைப்புடன் முரண்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார டீ சில்வா, தெரிவித்துள்ளார். 

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில், இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பின் ஊடாகவே நிறைவேற்ற வேண்டும் என மனதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஷமில், இந்த வாதத்தை மறுத்ததுடன், குறித்த பிரிவுகள் அனைத்தும் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என கூறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .