Editorial / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர (SJB) சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை, வியாழக்கிழமை (30) விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க, செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டார்.
காலி, அகுளுகஹாவைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர், வெலிகம, வாலனையைச் சேர்ந்த கராஜ் உரிமையாளர் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்த பொலத்துமோதரவைச் சேர்ந்த இளைஞர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கொலைக்கு முன்னும் பின்னும் இரண்டு முக்கிய சந்தேக நபர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர், கொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டுவதற்கு ஏற்றவாறு பழுதுபார்த்த வாலனை கராஜின் உரிமையாளர், கொலையாளிகளுக்கு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்த பொலத்துமோதர இளைஞர் ஆகியோர் மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ருக்மன் குமார உள்ளிட்ட குழுவினரால் 26 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
19 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago