2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வல்லப்பட்டை வெட்டிய அறுவர் கைது

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

உடுகலகந்த- புளத்சிங்ஹல, ரபலிய அரச வனப்பகுதியில், அத்துமீறி பிரவேசித்து, அங்கிருந்த வல்லப்பட்டை  மரங்களை வெட்டிய அறுவரை, களுத்துரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஓட்டோவொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கத்தி, கோடரி உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவான மற்றும் அயகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 35,50 வயதுகளுக்கிடைப்பட்டோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .