2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.169.50 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த மூவரை  செவ்வாய்க்கிழமை (12) அன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள்  கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொழும்பு பகுதியில் வசிக்கும் மூன்று தொழிலதிபர்கள்.

எமிரேட்ஸ் விமானம் EK-648 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அவர்கள் தங்கள் பொருட்களில் 113,000 வெளிநாட்டு தயாரிப்பு "பிளாட்டினம்" மற்றும்
"மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 565 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .