2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வழுக்கைக்கு ஓய்வூதியம்

Editorial   / 2023 ஜனவரி 08 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழுக்கைத்  தலை உடையவர்களுக்கும் மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விடுக்கப்பட்டு கோரிக்கைக்கு சாதாகமான பதில் வழங்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவிலேயே இடம்பெற்றுள்ளது.  

தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்களுக்கான சங்கமொன்று இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இச் சங்கத்தின்  தலைவரான ‘பாலையா‘ என்பவர் அண்மையில் அம்மாநில முதலமைச்சர்  சந்திரசேகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

அதில் அவர், ”சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் பல பிரச்சினைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கிறார்கள். அதிலும் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது.

குறிப்பாக அவர்கள்  4 பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள். வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக உள்ளது. வழுக்கை தலை இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்.

 ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்குகிறீர்கள்.

அதுபோல் வழுக்கைத்  தலை உடையவர்களுக்கும் மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுவோம்' எனத் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .