2026 மே 02, சனிக்கிழமை

வவுனிக்குளத்தில் இருந்து மூவரும் சடலங்களாக மீட்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை  நேற்று (19) இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .