Janu / 2026 ஜனவரி 27 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடை - எல்பிட்டிய வீதியில் கரந்தெனிய பனில்கந்த பகுதியில் திங்கட்கிழமை (26) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான கரந்தெனிய, நாமினிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விகும் தனஞ்சய பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டியவிலிருந்து - அம்பலாங்கொட நோக்கிச் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதிய நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026