2024 மே 24, வெள்ளிக்கிழமை

வாக்களித்தால் வைர மோதிரம்

Mayu   / 2024 மே 01 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலில் இந்த கட்சிக்கு வாக்களித்தால் வைர மோதிரம் மற்றும் பல பெறுமதியான பரிசு பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிக ஆர்வத்துடன் தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அந்தவகையில், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்காளர்களுக்கு குலுக்கல் முறையில் வைர மோதிரம், லேப்டாப் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எதிர்வரும் 13-ம் திகதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நடப்பு மக்களவைத் தேர்தலில் போபாலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமுள்ள 2097 வாக்குச்சாவடிகளிலும், தலா 3 பரிசுகள் வீதம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இதற்கென தனியாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, வாக்களித்த பின்னர் குலுக்கல் டோக்கன்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் பெட்டிகளில் போட வேண்டும். இதிலிருந்து 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மே 7-ம் திகதி வாக்குப் பதிவு முடிந்ததும் 9-ம் திகதி பம்பர் குழுக்கள் நடைபெறும். குலுக்களில் வெற்றி பெறும் வாக்காளர்களுக்கு, வைர மோதிரம், லேப்டாப், டைனிங் டேபிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள தொழில்துறையினரோடு தேர்தல் ஆணையம் இணைந்து ஸ்பான்சர் மூலம் பரிசுகளை பெற்று வருகிறது.

இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் பெறப்பட்டிருப்பதாகவும், அனைத்து வெற்றியாளர்களுக்கும் கணிசமான அளவு பரிசு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பலன் அளிக்குமா என்பது 3-ம் கட்ட தேர்தல் நாளான மே 7-ம் திகதி தெரியவரும். தேர்தல் ஆணையம் சார்பில் வெயிலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நேரத்தோடு வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .