Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
வாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி, இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிலர் உயர்ந்த சபையில், இனவாத பேச்சுகளைப் பேசி இனவாதத்தை கக்கும், தமிழ் பேசும் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். சஹ்ரானின் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவருக்கு தலைவர் இருப்பதாகும் கூறும் இவ்வாறான உறுப்பினர்கள், இதை அரசின் பாதுகாப்பு பிரிவுக்குச் சொல்ல வேண்டும். நாடாளுமன்றில் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவின் முன் சொல்ல வேண்டும் மாறாக, இனவாத பேச்சுகளை பேசி இன நல்லுறவை சீர்குலைத்து வாக்குகளை பெற முயற்சிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாதியல்ல. முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, நாட்டின் அரசியல் சட்ட திட்டங்களுக்கும் ஆட்சிக்கும் ஏற்ப இணைந்து செயற்பட்டவர்கள். முஸ்லிம்களிடத்தில் பயங்கரவாதம் இல்லை. அப்படி இருந்தால் காட்டிக் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 22 இலட்சம் முஸ்லிம்களும் சஹ்ரான் பயங்கரவாதி எனக் கூறியபோதும் அவனுக்கு தலைவர் இருப்பதாக கூறுவது வெறும் இன மதவாதத்தை தூண்டும் செயலாகும். இவ்வாறான பேச்சுகளை பேசி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என, அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago