Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை மற்றும் சக்திவாய்ந்த மின்னல் தாக்கங்கள் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆரம்பித்த 24 மணிநேரத்தில், நாட்டின் பல பகுதிகள், மேற்கண்ட வானிலைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், சப்ரகமுவா, மத்தி வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் இடைக்கிடையான பிரதேசங்களில், மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும், கடும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் இதன்போது, சக்திவாய்ந்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுமென்றும், திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இவ்வாறான நேரங்களில், வீடுகளுக்கு வெளியேயோ மரங்களுக்குக் கீழேயோ இருக்க வேண்டாமெனத் தெரிவித்துள்ள திணைக்களம், வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், நீர்த்தேங்கங்களுக்கு அருகிலும் நிற்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது.
அத்துடன், வயர்கள் பொருத்தப்பட்ட தொலைபேசிகள், மின்சாரத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட மின் உபகரணங்களைப் பாவிப்பதைத் தவிர்க்குமாறும் கூறியுள்ள திணைக்களம், சைக்கிள், டிரெக்டர், படகுகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கடும் காற்று வீசக்கூடிய வானிலை நிலவுவதால், மரங்கள், மின் கம்பங்கள் போன்றன முறிந்து விழக்கூடுமென்றும் இதனால் இது விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago